பிறந்தநாளன்று மதுவிருந்து கொடுத்த கூலிக்கு நண்பனை தீர்த்துக்கட்டிய கொடூரம்!
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மது விருந்த கொடுத்த நண்பரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஓலைப்பட்டி அருகே கடந்த 3 வருடங்களாக மாரியம்மன் திருக்கோயில் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிற்பிகள் அக்கோயிலில் வேலையில் ஈடுபட்டு வந்தனர். சம்பவத்தன்று கோயிலில் வேலை பார்க்க வந்தவர்களில் செந்தில்குமார் என்பவருக்கு பிறந்தநாள். அதனையொட்டி நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நண்பர்களுக்கு செந்தில்குமார் மது விருந்து வைத்துள்ளார். அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார் இப்படியொரு அசம்பாவிதம் நடக்கும் என்பதை....
கூட்டமாக மது விருந்தில் கலந்து கொண்டவர்கள் நீண்ட நேரம் மது அருந்திக்கொண்டே ஆனந்தமாக பேசி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் உறங்க செல்ல செந்தில் குமாரும், சீனிவாசன் என்பவரும் மட்டும் மது அருந்துவதைத் தொடர்ந்தனர்.
அனைவரும் எழுந்து செல்லும் போது இவர்களும் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தை அடுத்த சில மணி நேரங்களில் நடந்த சம்பவம் உணர்த்தி விட்டது. இருவரும் மதுவை தொடர்ந்து குடிக்க, ஆழ்மனதில் இருக்கும் மன கசப்புகள் கக்க தொடங்கியது. ஒருவர் மாறி ஒருவர் வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். எதற்கும் எல்லை உண்டு என்ற போதிலும் இருவரின் வாய் சண்டைக்கும் எல்லையில்லாமலே போனது. ஆனால் கடைசியில் எல்லாத்தையும் முடித்து வைத்தார்,சீனிவாசன்.
குடிபோதையில் செந்தில் குமாரின் வார்த்தைகளால் ஆத்திரமடைந்த சீனிவாசன், அருகிலிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியிருக்கிறார். சதைகள் கிழிந்து ரத்தம் பீரிட்டு அடிக்க, வலியால் துடித்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் நண்பனை கத்தியால் குத்தி கொன்றதாக சீனிவாசனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது விருந்த கொடுத்த நண்பரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | உடலுறவு வைத்துக் கொள்வதில் சிக்கல்? விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR