நமக்கு நாமே திட்டத்தில் 23 லட்சம் மதிப்பிலான 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு
அரசின் திட்டமான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 23 லட்ச ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டத்தில் வெற்றியடைந்த திட்டமாக கருதப்படுவது நமக்கு நாமே திட்டம். தற்போது இந்த திட்டத்தின் கீழ், 23 லட்ச ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்தின் நோக்கம்:
பொது மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்துவதுமே நமக்கு நாமே திட்டத்தின் பிரதான நோக்கம் என அரசு தெரிவித்திருந்தது. தனிநபர் குழுக்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளையினர், பொது மற்றும் தனியார் நிறுவனத்தினர் இத்திட்டத்தின் பயனை பெற முடியும். மேற்கொள்ளப்பட உள்ள பணியில் மூன்றில் ஒரு பங்கு தொகையை பங்களிப்பு தொகையாக வழங்க சம்மதம் தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் அதாவது கிராம ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய வகுப்பறைகள் திறப்பு:
திரிசூலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இந்த இரண்டு வகுப்பறைகளையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், எம்எம்ஆர்டி ரோஷன் குமார், எம்எம்எல் சி பாயல்மேத்தா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இந்த புதிய வகுப்பறைகளை, முழு முயற்சி செய்து கட்டிக்கொடுத்த ரவுண்ட் டேபிள் இந்தியாவின் விஜயராகவேந்திரா, திவ்யா சேத்தன் உள்ளிட்டோரை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.
இந்த 2 வகுப்பறைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரமான கல்வியை உறுதி செய்யும் என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, எதிர்கால மாணவர்களின் நலனுக்கும் இது உதவும் என்றார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் மீண்டும் அரசுப்பள்ளிகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். தரமான வகுப்பறைகளை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் சுய சிந்தனையை வளர்க்கும் தரமான கல்வி என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ’கத்துக்குட்டி அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை’ ஜெயகுமார் கடும் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ