தமிழில் பெயர் வையுங்கள் - அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய சுப்பிரமணியன்,“அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அட்சய பாத்திர திட்டம் தன்னார்வ தொண்டு நினுவனங்களால் ஒருசில பள்ளிகளில் நடத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழக அரசால் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலானது. அது தொடர்பாக சிறப்பு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். 7000க்கும் மேலான காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று 374 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “ குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும். பெயர் வைக்க யாரையும் கட்டுப்படுத்த முடியாது” என கூறினார்.
மேலும் படிக்க | Madras HC: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து
மா.சுப்பிரமணியனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம். பெண்களுக்கெதிரான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. மனரீதியிலான உளவியல் பிரச்சனைகளுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | RS mangalam பள்ளி வினாத்தாள் கசிவு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட மூவர் சஸ்பெண்ட்
கரு உருவானது முதல் 2 வயதுவரை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டும். முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை ஏழை எளிய மக்கள் வரவேற்றுள்ளார்கள். விரைவில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ