ICC-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா ஆடவர், நமீபியா மகளிர் அணியை உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ICC முடிவெடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது, இதில் நைஜீரியா, யுஏஇ, ஹாங்காங், அயர்லாந்து, ஜெர்சி, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பபுவா நியுகினியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மேலும் இரண்டு அணிகள் அமெரிக்காஸ் பைனலிலிருந்து தகுதி பெறும்.


இந்தத் தகுதிச் சுற்றுகளில் டாப் 6 அணிகள் 2020 உலக டி20 கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்கும்.


டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் இந்த டாப் 6 அணிகள் வங்கதேசம், இலங்கை ஆகியவற்றுடன் முதல் சுற்றில் இணையும். இந்த 8 அணிகள் 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதிலிருந்து ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் டாப் 2 அணிகள், ஆக மொத்தம் 4 அணிகள் பிரதானச் சுற்றில் மோதும் 8 அணிகளுடன் இணைந்து, 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் டி20 சூப்பர் 12 அணிகளுக்கு இடையிலான தொடரில் இணையும்.


இந்நிலையில் சமீபத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அந்நாட்டு அரசியல் தலையீடு இருப்பதாகவும், இதனை பல முறை ICC எச்சரித்தும் பலன் இல்லை எனவும் ஜிம்பாப்வே அணியை ICC தடை செய்தது. இதனையடுத்து எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பினையும் ஜிம்பாப்வே இழந்தது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கான மாற்று அணியை தகுதி சுற்றில் களமிறக்க ICC ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.