அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி - பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவு
அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் தங்களது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசியக்கொடிக்கு கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை முகப்பு படமாக மாற்றினார். அதேபோல் செல்வராகவன், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தனர்.
மேலும் படிக்க | கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதிவரையில் நாடு முழுவதும் தேசியக்கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்றுவருகிறது.
மேலும் படிக்க | குற்ற வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை
இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி" ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அரசியலில் ஆளுநர் ஆர்.என். ரவி; ரஜினி சொன்ன ஆதாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ