பக்கிங்காம் கால்வாய், கூவம்ழ் அடையாறு நீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசிற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பக்கிங்காம் கால்வாய், கூவம்ழ் அடையாறு நீர்நிலைகளை பராமரிக்கத் தவறி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய காரணத்திற்காக தமிழக அரசிற்கு 100 கோடி ரூபாயை அபராதமாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.


சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரக்கோரி தொடுத்த வழக்கில், பசுமை தீர்பாயம் இந்த அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. மேலும் வரும்  ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பசுமை தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2014-15 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, சென்னையில் ஓடும் நீர்வழித்தடங்களான கூவத்தை முழுவதுமாக சீரமைக்க பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அதற்காக 1,934,84 லட்சம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 604,77,00,000 ரூபாய்கான நிர்வாக அனுமதி வழங்கி, இத்திட்டத்திற்கு 2015-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன, எனினும் இந்த பணிகள் சரிவர நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டு வருகிறது.


இதன் காரணமாக கழிவுநீர் பூமிக்குள்ளும், நீர்வழித் தடங்களிலும் விடப்பட்டு, நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் மாசடைந்து வருகிறது. 


இதற்கிடையில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரக்கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம் இந்த அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறப்பு குழுவை நியமித்தது, மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிரப்பித்துள்ளது.