சென்னை: சட்டமன்றத் தேர்தலை உறுதிசெய்வதற்கான முதல்வர் வேட்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edpppadi K Palaniswami) என்று ஆளும் அதிமுக வலியுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அதன் கூட்டணி கட்சியான பாஜகவின் முக்கியத் தலைவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயலாளரும் தமிழ்நாட்டின் பொறுப்பாளருமான சி.டி. ரவி (C T Ravi), செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, தமிழ்நாட்டில் என்.டி.ஏ தலைமை (NDA Committee) ஆட்சிக்கு வந்ததும், தமிழக முதலமைச்சர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு இறுதி முடிவு எடுக்கும் எனக் கூறினார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் எங்கள் (BJP) நல்லுறவைக் கொண்டுள்ளது என்றும், சரியான நேரத்தில் பாஜகவின் மேலிடம் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவை எடுக்கும் என்றும் அவர் திட்ட வட்டமாகக் கூறினார்.


தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் எனவும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் (BJP Tamilnadu president L Murugan) மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.


ALSO READ | இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி ADMK தான்: EPS


அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளத்தால், திமுக (DMK), அதிமுக உட்பட மாநில கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமுகவை பொறுத்த வரை, முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூறிவந்தாலும், பாஜக அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக (AIADMK) மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. 


தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக-வின் மூத்த தலைவரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி (K P Munusamy) கூறுகையில், அதிமுக கூட்டணி கட்சிகள் திரு. பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரத்தில் பங்கைக் கோரக்கூடாது. அதாவது தேர்தலில் அ.தி.மு.க தலைமை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் அதிகாரம் அல்லது அமைச்சரவை பதவிகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கக்கூடாது. இல்லையெனில் காவி கட்சி (Saffron Party) அதன் விருப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என மறைமுகமாக பாஜகவை கடுமையான தாக்கி பேசினார்.


ALSO READ | பாஜக கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்


அதன் பிறகு தான் பாஜக (BJP) தரப்பில் இருந்து, முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து வெளியாகி உள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு தான் முடிவு செய்யும் எனவும் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி ட்வீட் செய்துள்ளார்.


 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR