இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி ADMK தான்: EPS

நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2020, 01:12 PM IST
    1. புயல் காலத்தில் புயலைவிட வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுத்தோம்.
    2. சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன; அது தவிடுபொடியாகிவிட்டது.
    3. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்.
இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி ADMK தான்: EPS  title=

நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், ரஜினியும் (Rajinikanth) ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து காட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக-வின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுகூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (EPS), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது., தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே பெருமை AIADMK-வுக்கு உள்ளது. தலைவர்கள் மறைவிற்கு பின் மூன்றரை ஆண்டுகாலம் தமிழகம் சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது. ஜெயலலிதா, MGR-க்கு வாரிசுகள் இல்லை, தொண்டர்கள் தான் அவர்கள் வாரிசு.

ALSO READ | ‘காவிரி காப்பான்’.. ‘நானும் ஒரு விவசாயி’ என EPS நாடகம்: MKS

அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைப்பவர்கள். ஆனால், AIADMK நாட்டுக்காக உழைக்கும் ஒரே கட்சி. புல்லுறுவிகள், துரோகிகள் சிலர் இயக்கத்தை உடைக்க நினைத்தார்கள். தொண்டர்கள் நிறைந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சர் ஆகிய ஒரே கட்சி AIADMK மட்டும் தான் என்று பெருமிதாக தெரிவித்தார்.

ஒற்றுமையுடன் இருந்தாலும் எதையும் வெல்லாம். நாளை பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆகலாம், நாளை நீங்களும் கூட ஆகலாம். ஜெயலலிதா (Jayalalithaa) நினைவிடம் இந்தியாவிலேயே ஒரு சிறந்த நினைவிடமாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் நினைவிடம் திறக்கப்பட உள்ளது அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்க வேண்டும். இதைப்போல போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் பொதுமக்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். AIADMK-வை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். இன்று நான் முதல்வராக இருக்கலாம். ஒபிஎஸ் முதல்வராக இருக்கலாம். நாளை தொண்டர்களில் ஒருவர் முதல்வராக வர வாய்ப்புள்ளது. ஒரு தொண்டன் முதல்வரானது அதிமுகவில் மட்டுமே சாத்தியம்” என அவர் கூறினார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News