சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவடைந்தது. ஆன்லைனில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் முறையாக விண்ணப்பம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

59 ஆயிரத்து 756 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆனால் கடந்த 2 ஆம் தேதியே பட்டியலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியாகவில்லை.


இதுக்குறித்து நேற்று மருத்துவக் கல்வி இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்களுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 06) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இன்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடம் பெற்றுள்ளார். 


நாளை மறுநாள் (திங்ககிழமை) கலந்தாய்வு நடைபெறும் எனவும், ஜூலை 8 ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அடுத்த நாள் (ஜூலை 9) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.