இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..! ஹர்திக் பாண்டியாவுக்கு காத்திருக்கும் சவால்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதனால் இந்திய அணிக்கான அடுத்த டி20 கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 3, 2024, 04:07 PM IST
  • ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த சிக்கல்
  • இந்திய அணியின் புதிய கேப்டன் யார்
  • பாண்டியாவுக்கு போட்டியாக 4 இந்திய வீரர்கள்
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..! ஹர்திக் பாண்டியாவுக்கு காத்திருக்கும் சவால் title=

இந்திய அணியின் டி20 கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அவருடன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 பார்மேட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துவிட்டனர். அவர்கள் இனி இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள். அதனால், இந்திய அணிக்கான அடுத்த டி20 கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேஸில் ஹர்திக் பாண்டியா முன்னணியில் இருந்தாலும் அவருக்க போட்டியாக மொத்தம் நான்கு பிளேயர்கள் இருக்கின்றனர். 

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் நகரில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்த தனி பிளைட் மூலம் தாயகம் திரும்பிவிட்டனர். நேரடியாக டெல்லி வரும் இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர். அதன்பிறகு மும்பை செல்லும் இந்திய அணியினர், விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்த பேருந்து அணி வகுப்பில் பங்கேற்கின்றனர். அத்துடன் இந்திய அணிக்காக கிட்டதட்ட 15 ஆண்டுகளாக டி20 பார்மேட்டில் ஆடிய விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பயணம் முடிவுக்கு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இந்திய இளம் வீர ர்களின் புதிய அத்தியாயம் டி20 போட்டிகளில் தொடங்க இருக்கிறது. ஆனால், அந்த அணியை கேப்டனாக வழிநடத்தப்போவது யார்? என்பது தான் இப்போதைக்கு இருக்கும் கேள்வி. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பன்ட், சுப்மன் கில் ஆகியோர் இந்த ரேஸில் இப்போது இருக்கின்றனர். 

மேலும் படிக்க |  விராட் கோலியை நீக்க சொன்ன அணி நிர்வாகம்! கேப்டன்சியை விட்டு விலகிய தோனி!

ஹர்திக் பாண்டியா

2022 டி20 உலக கோப்பை முடிந்தவுடன் இந்திய அணிக்கான டி20 பார்மேட்டின் கேப்டனாக செயல்பட்டவர் ஹர்திக் பாண்டியா. இப்போதும் இவரே இந்த ரேஸில் முன்னணியில் இருக்கிறார். விரைவில் இந்திய அணியின் டி20 கேப்டனாக அதிகாரப்பூர்வதாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என நடந்து முடிந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி தனது முத்திரையை பதித்திருக்கிறார். இருப்பினும், 2026 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்த முடிவு என்பதால் சஸ்பென்ஸூம் இருக்கிறது. 

மேலும் படிக்க |  இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா? - பரபரப்பு தகவல்

ஜஸ்பிரித் பும்ரா

டி20 பார்மேட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் வாய்ப்புள்ளவர் ஜஸ்பிரித் பும்ரா. பந்துவீச்சில் உலகத் தரம்வாய்ந்தவராக இருப்பதால், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர் என்பதாலும், இவரை கேப்டனாக நியமிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாண்டியா பெயர் பரிசீலிக்கப்பட்டால், பும்ராவின் பெயரும் அந்த பரிசீலனையில் இருக்கும்.

சூர்யகுமார் யாதவ்

டி20 பார்மேட்டில் உலகின் டாப் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். நடந்து முடிந்த உலககோப்பையில் தனக்கே உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றாலும், கடைசி ஓவரில் பிடித்த கேட்ச் இந்திய அணிக்கான உலகக்கோப்பையை சாத்தியமாக்கியது. பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் முத்திரை பதித்திருக்கும் இவரும் கேப்டன் பொறுப்புக்கான வாய்ப்பில் உள்ளார்.

ரிஷப் பந்த்

காயத்தில் இருந்து குணமடைந்து நேரடியாக இந்திய அணியின்  டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தவர் ரிஷப் பந்த். பேட்டிங் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவரை டி20 பார்மேட்டில் இந்திய அணயின் கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதனை பிசிசிஐ பரிசீலிக்குமா? என்பது தெரியவில்லை. இருப்பினும் ரிஷப் பந்தும் கேப்டன்சி ரேஸில் இருக்கிறார்.

சுப்மன் கில்

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் பிளேயராக அறிவிக்கப்பட்டு பின்னர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சுப்மன் கில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கில், ஜிம்பாப்வே தொடரில் கேப்டன் பொறுப்பை சிறப்பாக கையாண்டால் இந்திய அணிக்கான நிரந்த டி20 பார்மேட் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News