சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் அவருடைய குறிப்பில் தெரிவித்திருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் இந்த மசோதா சட்டமாகும். ஆனால் அதனை அவர் அரசுக்கே திருப்பி அனுப்பியிருப்பது தமிழக கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ மாணவ சேர்க்கைக்கு பயன்படும் நீட் தேர்வில் (NEET Exam) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜ.க தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா (Anti NEET Bill) தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த மசோதாவை சட்டமாக்காமல் ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். 


இதற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் தமிழக அரசு (TN Govt) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அடுத்தது என்ன செய்யலாம் என நாளைய கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது.


மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்டதே சட்டசபை. அந்த சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதே மரபு. அதனை மீறி ஆளுநர் செயல்படுவதால் தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 


ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்


சட்டரீதியாக அரசு மீண்டும் அந்த மசோதாவை (Anti NEET Bill) ஆளுநருக்கு அனுப்பினால் அதனை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் குடியரசுத் தலைவரும் அந்த மசோதாவை கிடப்பில் போட்டால் என்ன செய்வது என அரசு சிந்தித்து வருகிறது. 


ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான எழுவர் விடுதலை மீதான விடுதலை தீர்மானத்தை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டிருக்கிறார் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. 


ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு


நீட் விலக்கு (Anti NEET Bill) தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தலாமா எனவும் தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆனால் அதிலும் ஒன்றிய அரசுக்கு ஆதரவான தீர்ப்பு வரவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீட் கட்டாயம் என தீர்ப்பளித்திருக்கிறது. நாளைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இவை குறித்து விளக்கமாக பேசப்பட இருக்கிறது.


இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (RN Ravi) டெல்லி செல்ல இருக்கிறார். நீட் விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது முக்கிய பயணமாக பார்க்கப்படுகிறது.


ALSO READ | 2022 NEET PG நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR