நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2022, 01:55 PM IST
  • நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு விவகாரம்
  • முரண்படும் தமிழக பாஜக
  • அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு
நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு title=

சென்னை: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி இன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் இந்த கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் நடைபெற்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜகவின் சார்பில் கலந்துக் கொண்ட வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு (National Eligibility cum Entrance Exam) எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரிகளில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த அனைத்து முனிவர்களுக்கும் 60 சதவீத நிதி உதவியை மத்திய அரசு செய்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

நீட் தேர்வு என்பது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ALSO READ | நீட் தேர்வில் இருந்து விலக்கு விவகாரம்! இன்று அனைத்து கட்சி கூட்டம்

சமூக நீதி அடிப்படையில் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. கிராமப்புற அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வு (National Eligibility cum Entrance Exam) எதிராக உள்ளதாக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

ஆனால், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் நலனை 7.5 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 12 வருடங்களாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்க படாமல் இருந்ததால் நீட் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது, ஆனால் பழியை மாணவர்கள் மீது போடுகிறார்கள்

நீட் தேர்வு வருவதற்கு முன்  மாணவர்கள் எவ்வளவு கல்விக் கட்டணம் கட்டினால் தற்போது எவ்வளவு கட்டுகிறார்கள் என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மணாவர்களை தற்கொலைக்குத் தூண்டி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக வேண்டாம் என்று எச்சரித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இன்னொரு உணர்ச்சி அரசியலை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். 

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுகாமல் இருந்ததற்கு அவரது பணி சுமை காரணமாக இருக்கலாம். அதையும் தாண்டி புதுதில்லியில் கோவிட் தொற்று பரவல் அதிகமாக உள்ளது, சூழல் சரியான உடன் அதற்கான நேரம் ஒதுக்குவார்.

அரசுக்கு தேவையான தரவுகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தந்திருக்கிறது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ALSO READ | நீட் தேர்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News