ஆளுநர் VS தமிழக அரசு: நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்..!
நீட் விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கவை அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்கு விலக்குகோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்
இது குறித்து முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, பிப்ரவரி 1 ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, இந்த கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல என்று தெரிவித்துள்ளது.
ALSO READ | முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை
நீட் தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதில் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றதில் இயற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனக் கூறியுள்ளது. இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR