தர்மபுரி: நீட் தேர்வு அச்சம் காரணமாக இன்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மதுரையில் ஜோதி துர்கா (Jyothi Durga) என்ற மாணவி, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை (Neet Suicide) செய்துக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை நீட் தேர்வு (Neet Exam 2020) எழுத இருந்த தருமபுரி மாணவர் ஆதித்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. அவரின் தற்கொலைக்கு காரணம், நீட் தேர்வு அச்சம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.


தர்மபுரி மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, மாணவி ஜோதி துர்கா, கடந்த ஆண்டு நீட் தேர்வு (NEET Exam) எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். நாளை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மூன்று பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பல மாணவ-மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். அந்த வரிசையில், இன்று ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்துக்கொண்டது, பல பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 


ALSO READ | 


அனிதா டூ சுபஶ்ரீ !! நீட் தேர்வு என்ற பெயரில் அரசே நடத்தும் கல்விக் கொலைகள்: மு.க.ஸ்டாலின்


நீட் தற்கொலை!! "படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை" -இயக்குனர் சேரன் நம்பிக்கை


நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தின் முக்கிய முடிவு! என்ன சொன்னது தெரிந்துக்கொள்ளுங்கள்