திமுக அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் ஏமாற்றப்பட்ட சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள செய்தியில் :


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் அவர்களும் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும் , மாணவ , மாணவியர் அனைவரும் சிறந்த கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாயுள்ளத்தோடு செய்து கொடுத்து இளைய தலைமுறையினர் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து , நீடித்து வாழ்ந்து வருகின்றனர்.


அந்த வகையில் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியோடு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாணவ , மாணவியரின் நலன்களை பாதுகாப்பதிலும் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.


ALSO READ : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிமன்றம்


இந்நிலையில் சேலம் மாவட்டம் , மேட்டூர் சட்டமன்றத் தொகுதி , கூழையுரைச் சேர்ந்த "விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் திமுக வின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் இந்த அரசால் நீட் தேர்வுக்கு வில்க்கு பெற இயலாத அரசாக உள்ளதை நாள்தோறும் எண்ணி மனம் நொந்து வாழ்க்கையில் பல எல்லைகளைக் கடந்து சாதித்து, இந்த நாட்டிற்காகவும் ,தமிழக மக்களுக்காகவும் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மாணவன் தனுஷ் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.அன்னாரின் மரணத்திற்கு திமுகவும் அதன் அரசும் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.அன்னாரின் குடும்பத்திற்கு 1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும் , அவரது குடும்பத்திற்கு அவர் இருந்து ஆற்ற வேண்டிய பணிக்கு ஒப்பாக தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் , அவர் தம் குடும்பம் எவ்வித சிரமமும் இன்றி எதிர்காலத்தைக் கடக்க வழிவகை செய்ய வேண்டும்.


இந்த துயரமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு அனைவரையும் தன் கண் எனக் காக்கும் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த தனுஷ் அவர்களின் மரணத்திற்கு எதைக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தபோதிலும் அவர்தம் குடும்பத் துயரத்தில் பங்குபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சிறிய உதவியாக , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


எந்த துயரம் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி மாண்புமிகு அம்மாவின் வழியிலே பீடுநடை போட்டு வெற்றி பெற வேண்டும் என்கின்ற போராட்ட குணத்தை மாணவச் செல்வங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக பெற்றோர்களுக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவச் செல்வங்கள் வழங்கி விடக்கூடாது என்பதை அறிவுரையாக கூறி தன் இன்னுயிரை நீத்த அன்புசெல்வம் தனுஷ் அவர்களின் மறைவிற்கு கழகத்தின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு எல்லாம் வல்ல இறைவன் அவர் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உறுதியையும் வலிமையையும் தரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இது தவிர தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் :


பசப்பும் திமுக!  பாவம் மாணவர்கள் என்றும் நீட் தேர்வு அண்மைக் காலத்தில் மீண்டும் பேசு பொருளாகி வருகிறது. மக்களுக்கு தொண்டாற்றும் மகத்தானப் பணி மருத்துவ பணி. அந்த மருத்துவப் பணியில் ஈடுபட நீட் தேர்வு அவசியம் என்று "உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 சட்டப் பிரிவு 10D மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.


மருத்துவ படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும் நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகம் தவிர மற்ற அனைத்து காங்கிரஸ் , கம்யூனிஸ்டு ஆளும் மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்தும் திமுக வினரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.


இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ : சேலத்தில் நீட் தேர்விற்கு தயாரான மாணவன் தற்கொலை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR