சென்னை: நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளநிலையில், மதுரையில் ஜோதி துர்கா (Jyothi Durga) என்ற மாணவி, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை (Neet Suicide) செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துயர சம்பவத்தால் அனைவரையும் உலுக்கியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பல மாணவ-மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவி ஜோதி துர்கா, கடந்த ஆண்டு நீட் தேர்வு (NEET Exam) எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். நாளை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மூன்று பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். 


தற்கொலை செய்துக்கொண்ட மாணவி மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல் குடியிருப்பை சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் (Murugasundaram) என்பவரின் மகள் ஆவார். மாணவியின் தற்கொலை குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ALSO READ | 


அனிதா டூ சுபஶ்ரீ !! நீட் தேர்வு என்ற பெயரில் அரசே நடத்தும் கல்விக் கொலைகள்!!


ஏன் இவ்வளவு பிடிவாதம்? NEET/JEE தேர்வுகளை ஒத்திவைக்க மோடி உத்தரவிட வேண்டும்: சு.சுவாமி


நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்; 6 மாநிலங்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்


நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட மாணவிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் சேரன் (Director Cheran) தனது ட்விட்டர் பக்கத்தில், "படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.