நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி மற்றும் செல்லம்மாள் தம்பதியினர். கூலித்தொழிலாளர்களான இவர்கள் அதே பகுதியில் கல்லுடைக்கும் பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 19 வயதான அஞ்சலை என்ற மகள் இருந்துள்ளார். 12ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த அஞ்சலை, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இது குறித்து சூர்யா மற்றும் அஞ்சலை ஆகியோரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அதனை தொடர்ந்து இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி அடுத்த 6 மாதத்தில் திருமணமும் நடத்தி முடிக்க பெற்றோர் முடிவு செய்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே இவர்களின் காதல் குறித்து அஞ்சலிையின் வீட்டின் அருகே உள்ள அக்கம் பக்கத்தினர் இழிவாகவும், தவறுதலாகவும் பேசியதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | காதல் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்..!


இதனால் மனமுடைந்த அஞ்சலை, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அங்கிருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த கடிதத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், தான் நல்லவள் எனவும் கூறி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், எனது சூர்யாவிற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை அவனை எதுவும் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அஞ்சலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அஞ்சலியின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், சமூகத்தின் மீது கடும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | 11-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை - சில்மிஷ இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR