நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜேசுராஜ், மரியராஜ் மற்றும் இவர்களது சகோதரி வசந்தா. இதில் வசந்தா அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான அழகர்சாமி குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே பிரச்னைக்குறிய இடத்தில் போர் போடுவதற்காக அழகர்சாமி ஏற்பாட்டில் போர்வெல் லாரி வந்துள்ளது. ஆனால், போர் போடுவதற்கு ஜேசுராஜ், மரியராஜ் மற்றும் வசந்தா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலில் வாக்குவாதமாக தொடங்கிய இந்த தகராறு பின்னர் கைக்கலப்பாக மாறி கடும் மோதலில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமி தரப்பினர் அரிவாளால் ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோரை சரமாரியா வெட்டியதாக தெரிகிறது. 


மேலும், இதனை தடுக்க சென்ற வசந்தாவின் கணவர் உள்பட மூன்று பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில், படுகாயம் அடைந்த ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வசந்தாவின் கணவர் ஜேசு உள்பட மூன்றுபேர்  படுகாயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


மேலும் படிக்க | கொளத்தூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை - முதலமைச்சர் தொகுதியில் தலைதூக்குகிறதா ரவுடியிசம்?



தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



மேலும், சம்பவம் நடைபெற்ற நாஞ்சான்குளம் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டிஐஜி பரவேஷ்குமார் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR