சென்னை கொளத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பழனி. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த இவர் நேற்று இரவு ராஜமங்கலம் மகாரம் தோட்டம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ரவுடி பழனியை 2 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது. திடீரென அந்த கும்பல் அரிவாள், கத்தியை கொண்டு தாக்க முயன்றதால் உயிர் பயத்தில் பழனி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள குறுகலான சந்துகளில் புகுந்து ஓடிய அவரை சினிமா பாணியில் அந்த இருவர் கும்பல் துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் வீடு ஒன்றின் படிகட்டுகளில் ஏற முயன்ற பழனி, கால் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த இருவரும் பழனியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து வந்த போலீசார் பழனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | என்கவுண்டர் பிளான்; கோர்ட்டில் சரண் அடைந்த பிரபல ரவுடி படப்பை குணா
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பழனி சிறையில் இருந்தபோது ஆதி என்கிற அமாவாசை, சரண்ராஜ் ஆகிய இருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் வீடுகளுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது சரண்ராஜின் மனைவி புவனேஸ்வரிக்கும், பழனிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து சரண்ராஜ் பலமுறை எச்சரித்தும் அவரது மனைவியுடனான தொடர்பை துண்டிக்க பழனி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து பழனியை கொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட அண்ணா நகர் துணை ஆணையர் சிவபிரசாத், கொலையாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற மூன்று நாள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், தமிழகம் முழுவதும் ரவுட்டிகளின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில் முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பிரபல ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ரவுடிகள் அட்டகாசம்: ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு, நடத்துனரை மிரட்டி பணம் பறிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR