Nellai 9th student Knife Attack News : நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வளாகத்தில் கேந்திரி வித்தியாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பில் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று பள்ளியில் மோதல் ஏற்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவன், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?


இதனை நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக சக மாணவர்கள் உள்ளிட்டோர் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர். ஆனால் கோபம் ஆறாமல் இருந்த நாங்குநேரியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன், தன் வீட்டில் இருந்த சிறிய ரக அரிவாளை பள்ளிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு தன்னுடன் மோதலில் ஈடுபட்ட மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த சக மாணவனை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இது பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த மாணவன் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 


அவர் இப்போது நலமாக இருக்கும் நிலையில், தப்பியோடிய சக மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் சக மாணவனை இன்னொரு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்ற சம்பவம் வள்ளியூர் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நடைபெற்றது. சாதிய வன்மத்துடன் இரு தரப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், 22 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. 


அடுத்தடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சாதிய வன்மத்துடன் மோதிக் கொள்ளும் சம்பவம் தென் மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளி வளாகத்தில் சாதிய மோதலை தடுக்கவும், பாகுபாடின்றி மாணவர்கள் கல்வியை அமைதியான சூழலில் பயில்வதை உறுதி செய்யவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கல்வி பயில வரும் மாணவர்கள் சாதிய வன்மத்துடன் பள்ளி வளாகத்திலேயே மோதிக் கொள்ளும் சம்பவம் சாதாரணமாக அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது, இப்படியான விஷயங்களை முளையிலேயே கிள்ளியெறிய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு.... முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ