Latest News Actor Vishal : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் விஷால், எப்போதும் எதையாவது செய்து வம்பில் மாட்டிக்கொள்வதையே வேலையாக வைத்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை ஒரு பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். இது, தற்போது இணையதளங்களில் பேசு பொருளாக மாறி வருகிறது.
நீதிமன்ற பிரச்சனையில் நடிகர் விஷால்..
விஷால் நடிகராக மட்டுமன்றி, பட தயாரிப்புகளையும் சில ஆண்டுகள் செய்து வந்தார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் அந்த நிறுவனமும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனிடம் இருந்து பெற்ற கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதன் மொத்த தொகை, ரூ.21.29 கோடி என கூறப்படுகிறது.
இந்த தொகையை தங்கள் நிறுவனத்திற்கு திரும்ப செலுத்தும் வரை, விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் தங்களுக்கு வந்தாக வேண்டும் என லைகா நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இந்த நிலையில், அதை மீறி ‘வீரமே வாகை சூடும்’ படத்தினை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தனிச்சையாக வெளியிட முடிவு செய்தது. இதை எதிர்த்து, லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு, இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.
விசாரணை:
மேற்கூறிய வழக்கின் குறுக்கு விசாரணை நடைப்பெற்றது. இதற்கு விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர், விஷாலிடம் ஓப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஷால், தனக்கு ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | தளபதி விஜய்யை பார்த்து அரசியல் ஆசையா? விஷால் பேட்டி!
விஷாலின் இந்த பதிலை கேட்டு கோபப்பட்ட நீதிபதி கையெழுத்து போட்டதை எப்படி மறுக்க முடியும்? புத்திசாலித்தனமாக பதில் கூறுவதாக நினைக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். மேலும், இது சினிமா ஷூட்டிங் கிடையாது என கூறிய அவர் கவனமாக பதில் சொல்லுங்க என கூறியிருக்கிறார்.
அதற்கு விஷால், ‘Pass’ என்று கூறியிருக்கிறார். இதற்கு அர்த்தம் கேள்விக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்பதுதான். இதைக்கேட்டு கடுப்பான நீதிபதி, pass எல்லாம் சொல்லக்கூடாது என கூறியிருக்கிறார். கேட்கும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறுமாறு பேசியிருக்கிறார்.
மேலும், சண்டைக்கோழி 2 படத்தை வெளியிடுவதற்கு முன்பாக பணத்தை திருப்பு தந்து விடுவதாக நீங்கள் கூறினீர்களா எனவும், லைகா நிறுவனத்தை தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியிருக்கிறீர்களா என்றும் நீதிபதி வினவியிருக்கிறார். இதற்கு பதிலளித்த விஷால், லைகாவால்தான் அந்த கடனை வாங்க நேரிட்டதாக கூறியிருக்கிறார். விஷாலின் தற்போதைய செயல் தற்போது வலைதளங்களில் பேசு பொருளாக மாறி வருகிறது.
மேலும் படிக்க | ‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ