தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து நூறைக் கடந்துள்ளது. இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இரட்டை வேடம்போடுவதே திமுகவுக்கு வாடிக்கை - கடம்பூர் ராஜூ சாடல்


இதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரங்கையும் நீட்டித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின்படி, நர்சரி பள்ளிகள் செயல்படவும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், அழகு நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் , துணிக்கடைகள், நகைக் கடைகள் மற்றும் சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் பயணிக்க மட்டுமே தமிழக அரசு அனுமதிவழங்கியுள்ளது. மேலும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதியளித்துள்ள தமிழக அரசு, அனைத்து பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.


ALSO READ| விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காணவில்லை: முன்னாள் அமைச்சர் புகார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR