விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காணவில்லை: முன்னாள் அமைச்சர் புகார்

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2021, 04:33 PM IST
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காணவில்லை: முன்னாள் அமைச்சர்  புகார் title=

சென்னை: முன்னால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி  செய்ததாக விருதுநகர் மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  கடந்த15 நாட்களுக்கும் மேலாக போலீசார் தேடி வருகின்றனர். 

இந்தநிலையில், ராஜேந்திர பாலாஜியிடம் அதிக நேரம் தொலைபேசியில் பேசியதாக விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கடந்த 28 ஆம் தேதி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணை செயளாலர் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் மற்றும் ஜோலையார்பேட்டை அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

4 நாட்கள் ஆகிய நிலையில் இருவரும் எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை எனக் கூறி இவர்கள் குறித்து விபரம் தெரிய வேண்டுமென போலீசாரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். 

ALSO READ | ஆவினில் ஊழலுக்கு ராஜேந்திர பாலாஜி தான் முழு காரணம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

இதற்கிடையில் இதுவரை போலீசாரிடமிருந்து சரியான தகவல் கிடைக்கவில்லை எனக்கூறி இருவரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் இடம் புகார் கொடுக்கப்பட்டன. புகாரை பெற்றுக் கொண்ட பாலகிருஷ்ணன் இதுகுறித்து விசாரணை செய்து தகவல் தெரிவிப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அப்போது வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் தர்மபுரியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் ஓட்டுநரான ஆறுமுகம் மற்றும் அன்பழகனின் பினாமி என்று கூறப்படும் பொன்னுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை தர்மபுரியில் இருந்து பெங்களுரூ அழைத்து சென்று அங்கிருந்து ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தராக தகவல் வெளியானதை அடுத்து, அவர்களை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இன்னும் ஓரிரு நாட்களில் முன்னால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படலாம் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ | இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News