எம்.ஜி.ஆர். நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் முடிசூடா ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையினில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன.


இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளதாவது;- 


இந்த நாணயங்கள் ரூ. 100, ரூ. 10 மற்றும் ரூ. 5 மதிப்புகளில் வெளியாகும். 


எம்.ஜி.ஆர். உருவம் பொறித்து 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகிறது. இந்த நாணயங்களில் அவரது நூற்றாண்டை குறிக்கும் வகையில் கிழ் பகுதியில் ‘1917-2017’ என்று பொரிக்கப்படும்.


எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவம் பொறித்து 100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகிறது. இந்த நாணயங்களில் அவரது நூற்றாண்டை குறிக்கும் வகையில் கிழ் பகுதியில் ‘1916-2016’ என்று பொரிக்கப்படும்.


இந்தியாவில் முதல்முறையாக ரூ.100 நாணயங்கள் வளம் வர காத்திருக்கிறது. அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உருவங்களே முதன்முறையாக இடம்பெற உள்ளது என்பது சிறப்பம்சம்.


விரைவில் இந்த புதிய நாணயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.