10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு...!
ஜூன் 15 முதல் 25 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!
ஜூன் 15 முதல் 25 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முன்னதாக, ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்தாலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஜூன் 1 ஆம் தேதி 12 ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 3 மணிநேரம் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை...
ஜூன் 15: மொழிப்பாடம்.
ஜூன் 17; ஆங்கிலம்.
ஜூன் 19: கணிதம்.
ஜூன் 20: விருப்ப மொழி.
ஜூன் 22: அறிவியல்.
ஜூன் 24: சமூக அறிவியல்.
ஜூன் 25: தொழில்கல்வி தேர்வுகள் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தேர்வு மையங்களை பொறுத்த வரையில் முதலில் இருந்த தேர்வு மையங்கள் 3825, தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் 12,690. ஆகவே, 10 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை என்ற முறையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதற்கும், பெற்றோர்கள் மாணவர்களை அச்சமின்றி பள்ளிக்கு அனுப்புவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது" என அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.