உலகம் முழுவதும் 2023ம் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்பு விதமாக தினசரி மற்றும் மாத காலண்டகள் தயாரிக்கும் பணிகளில் பட்டாசு மற்றும் அச்ச தொழிலாளர்கள்  தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்களின்  அனைத்திலும் முக்கிய பங்கு வைப்பது நாட்காட்டி மட்டும்தான் -  குறைந்த செலவில் வருடம் முழுவதும் விளம்பரம் தரக்கூடியது நாட்காட்டி மட்டும்தான் - அத்தகைய நாட்காட்டி பல்வேறு வகைகளில் வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தயாரிக்கும் பணி சிவகாசியில் அச்சகங்களில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்த படியாக சிறந்த விளங்கும் தொழில் அச்சுத்தொழில். அச்சுத் தொழிலை நம்பி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் சுமார் 500க்கும் மேற்பட்ட அச்சகங்களில் தினசரி காலண்டர்கள் மற்றும் மாத காலண்டர்கள் அச்சடிக்கும் பணி இறுதிகட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


காலண்டர்கள்  தயாரிப்பதற்கு நிறுவனங்கள்  ஆடி மாதம் 18ம் தேதி காலண்டர்கள் தயாரிக்கும் பணியினை தொடங்குவது வழக்கம் இந்த நிலையில் வெறும் நான்கு மாதத்தில் காலண்டர் தயாரிப்பு பணி ஆனது சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தீவிரமாக நடைபெறும். தினசரி காலண்டர்களில் வழக்கமான காலண்டர்களுடன் டைகட்டிங் காலண்டர், அல்ட்ரா வைலட் காலண்டர், எம்போஸ் காலண்டர், பாயில்ஸ் கோட்டிங், வார்னிஸ், லேமினேஷன், சில்ட்ரன்ஸ் ஸ்பெசல் காலண்டர்கள், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க | தமிழகத்தில் மருத்துவத்துறையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்கள்! 


மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிவகாசியில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வருட அறிமுகமாக தினசரி காலண்டர்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும் QR கோடினை ஸ்கேன் செய்தால் அந்நாளின் சிறப்புகள் youtube வாயிலாக வீடியோ வடிவில் ஒளிபரப்பப்படும் வகையில் காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தேசிய தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகவர்கள், சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் படங்களுடன் கூடிய மேலும் மக்களை கவர கூடிய கோல்ட் பாயில்ஸ்,  பெட் பாயில்ஸ் , மாத காலண்டருடன் கூடிய தினசரி காலண்ட்ர், கமர்கட், மினி, UV வடிவில் காலண்டர் , அல்ட்ரா வடிவில் போன்ற வடிவில் சுமார் 50 க்கு மேற்பட்ட காலண்டர்கள் தயார் செய்யப்பட்டு  வாடிக்கையாளர்களிடம் எடுத்த ஆர்டர்களுக்கு, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மேலும் தமிழர்கள் வாழும் பகுதியான வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கபூர், மலேசியா, ஸ்ரீலங்கா, துபாய் , அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கு   காலண்டர்கள் அனுப்பும் தற்போது விறு விறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் காலண்டர்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மை காகிதம் உள்ளிட்டவை விலை உயர்ந்து வருவதாலும், திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதாலும் காலண்டர்களின் விலை 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. திமுக அரசு மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காலண்டர்கள் தயாரிப்பில் ஈடுபடும் காலண்டர் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | இதையெல்லாம் திருடுவாங்க..இரும்பு நடைபாதையை திருடும் கும்பல்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ