செப்., 5-ஆம் நாள் நடைபெறவுள்ள பேரணிக்கு பின்னர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கவுள்ளதாக முக அழகிரி அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி அவர்கள் தெரிவிக்கையில்... "நேரம் வரும்போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். சென்னையில் நடைபெறுவுள்ள பேரணியில் 100000 பேர் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய திமுக-வில் என்னை சேர்பது போல் தெரியவில்லை. செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணிக்கு பின்னர் அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன்." என குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த ஆக., 7-ஆம் நாள் உடல்நிலை குறைவால் காலமானதை அடுத்து, திமுக தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் வரும் ஆக., 28-ஆம் நாள் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினம் காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து இக்கூட்டத்தில் பங்கேற்க திமுக MLA-க்கள், உறுப்பினர்கள் சென்னை படையெடுத்துள்ளனர்.


இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் கலைஞர் அவர்களின் மூத்த மகன் முக அழகிரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இத்தகவலினை அவர் வெளியிட்டுள்ளார்!