தமிழகம் ஆளும் அ.தி.மு.க சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அ.தி.மு.க.வின் இரு அணிகளை இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக தெரிவித்திருந்தார். அதேசமயம் கட்சியையும், ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்துவார் எனவும் தெரிவித்திருந்த நிலையில் கட்சியை தான் வழிநடத்த இருப்பதாக அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மேலும் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும், அது தொடர்பான விவரங்களை வருகிற 4-ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும், வரும் 5-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.முக. தலைமை கழகத்துக்கு வரப்போவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தகவல்கள் பரவி வருகின்றன.


இவ்வாறு அடுத்தடுத்து அ.தி.மு.க பரபரப்பு ஏற்படுத்தும் சூழ்நிலையில் தினகரன் இன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், சசிகலாவுடனான இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


முன்னதாக தான் வரும் 4-ம் தேதி தரவிருப்பதாக தெரிவித்த அறிவிப்பிறகும் இச்சந்திபிற்கும் தொடர்பு இருபதாக சந்தேகிக்கபடுகிறது.