ISIS-க்கு ஆதரவு; மதுரையை சேர்ந்தவர் மீது NIA குற்றப் பத்திரிக்கை தாக்கல்..!!
மதுரையைச் சேர்ந்த அப்துல்லா என்ற தனிநபர் மீதான வழக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மதுரை மாநகரில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
சென்னை: ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட, மதுரை சரவண குமார் என்ற அப்துல்லா மீது தேசிய புலனாய்வு முகமை (NIA), தேசத்துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் UAPA) உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றப் பதிரிக்கை தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஐபிசி பிரிவுகள் 124 ஏ மற்றும் 505 (1) (பி) மற்றும் யுஏபிஏ பிரிவு 13 (1) (பி), 38 மற்றும் 39 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையைச் சேர்ந்த அப்துல்லா என்ற தனிநபர் மீதான வழக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மதுரை மாநகரில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், என்ஐஏ நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர், இந்தியாவின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், அவரது முகநூலில் பதிவுகள் போடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
ALSO READ | விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி முறியடிப்பு
என்ஐஏ (NIA) விசாரணையில் சரவண குமார் என்ற அப்துல்லா , பல நாடுகளைல் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஹிஸாப் உத் தாஹிர் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர், ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாத சித்தாந்தத்தை ஆதரித்து வருபவர் என்பது ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களை பரப்புவதற்கும் ஆதரவளிப்பதற்கும் பணியாற்றி வந்தார் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read Also | 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR