தமிழகத்தில் 5 இடங்களில் NIA அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூர நாச வேலையால் 259 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். AS ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் தமிழ்நாட்டில்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.


தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலை கிடைக்காததால் இலங்கை சென்று கொழும்பில் கை வரிசை காட்டி உள்ளனர். இந்நிலையில், சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து கடந்த 14ஆம் தேதி சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில்  ஹசன் அலி, ஆரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 


தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி டெல்லி விரைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக 14 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். இதையடுத்து 16 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை, இன்று அவர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.