15 வீடுகளில் என்ஐஏ ரெய்டு... பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பா? - சீர்காழியில் பரபரப்பு
![15 வீடுகளில் என்ஐஏ ரெய்டு... பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பா? - சீர்காழியில் பரபரப்பு 15 வீடுகளில் என்ஐஏ ரெய்டு... பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பா? - சீர்காழியில் பரபரப்பு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2025/01/28/471714-nia-raid.png?itok=arW9aBp_)
TN Latest News Updates: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் என்ஐஏ (NIA) அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tamil Nadu Latest News Updates: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணியளவில் இருந்து கேரளாவ, ஆந்திரா மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமையின் (NIA) அதிகாரிகள்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்காழி போலீசார் துணையுடன் 15 வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. மேலும், இச்சோதனைக்கு 15 குழுக்களாக அதிகாரிகள் வந்துள்ளதால் திருமுல்லைவாசல் கிராமமே பரபரப்பாக காணப்படுகிறது. அப்பகுதியில் வசித்து வரும் பாசித், நபீன் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதுதொடர்பாகவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
என்ஐஏ திடீர் சோதனை... ஏன்?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர். திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்புதெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அமிர், நஃபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்டோரின் 15 வீடுகளில் 16 குழுக்களாக பிரிந்துசென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆய்வு நிறைவடைந்த பின்னரே சோதனை குறித்த முழு விவரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
5 வீடுகளில் என்ஐஏ சோதனை நிறைவு
திருமுல்லைவாசல் பகுதியில் ஒரே நேரத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் களம் இறங்கி திடீர் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்சரலி, அஸ்கர் அலி, முகமது அமீர், முகமது நசீம், இஜாஸ் அகமது ஆகிய ஐந்து பேரின் வீடுகளில் சோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
சோதனை நிறைவடைந்த இடங்களில் செல்போன்கள் மற்றும் பென்டிரைவ்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனையை முன்னிட்டு ஐம்பதுக்கு மேற்பட்ட போலீசார் திருமுல்லைவாசல் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாஜித் என்பவரை 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமுல்லைவாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு இரண்டு செல்போன்கள் சிம்கார்டுகள் சிடிகள் பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். அந்த ஆண்டே ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்குத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் வீட்டில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் அல்பாஜித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறினார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அமீர், நஃபீன், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி, மஹதீர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை செய்து செல்போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். மேலும் இந்த சோதனையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து எடுத்து சென்றனர்.
மேலும் படிக்க |ஜனவரி 31.. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ