பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நித்தியானந்தா மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்ய இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்தியானந்தா தனது ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோ பதிவு மூலம் தரிசனம் அளித்து வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைலாசா என்ற தீவை வாங்கிவிட்டதாகவும் அதை ஒரு நாடாக அங்கீகரிக்கக்கோரியும் உலக அரசை உலுக்கி எடுத்தார்.


மேலும் கைலாசாவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வாருங்கள் மகிழ்ந்து வாழலாம் என்று எல்லாம் டைலாக்குகளை பதிவிட்டு போலீஸாருக்கு தண்ணீர் காட்டி வந்தார்.



இவ்வாறான நிலையில் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை குன்றியிருப்பதாகவும், மோசமான நிலையில் நித்தியானந்தா இருப்பதாகவும் புரளிகள் வெளியாகின. வதந்திகளின் உச்சமாக நித்தியானந்தா இறந்துவிட்டார் என்றும் பேச்சுக்கள் ஓடின.


மேலும் அவரது சொற்பொழிவு வீடியோக்கள் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அவை முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்களின் எடிட்டுகள் என்றும் பரவலாக பேசப்பட்டது.


பின்னர் அவர் சாவின் விளிம்பில் இருப்பதுபோன்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டன. இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.


இவ்வாறு இருக்க கடந்த மே மாதம் 11 ஆம் தேதியில் நித்தியானந்தா தனது மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்துள்ளார்.



அவர் நேரில் தோன்றி அளித்த அவரது விளக்கத்தில், நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. மேலும் அவர் விளக்கமளிக்கையில், “எனக்கு உடல்நிலை சரியில்லை. 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. 


மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ


பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 


தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. 



என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும்  அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக்கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். 


நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்று கூறியுள்ளார்.


இதையடுத்து, அவர் மே 11-ம் தேதி எழுதியது போன்ற கடிதத்தில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்ற குறிப்பிட்டவாறு தெரிகிறது. 



இதையடுத்து அவரது மரணம் குறித்த வதந்திகளை நம்பாமல் நம்பிக்கையுடன் இருந்த அவரது ஆதரவாளர்களில் பலர் அவரது உடல் நிலை பாதிப்புற்றது குறித்த உறுதிப்படுத்தலால் சோகத்திற்குள்ளாகியுள்ளனர். 


மேலும், நித்யானந்தாவுக்கு என்ன ஆனது, அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மேலும் படிக்க | இந்த செயலிகள் இனி பிளே ஸ்டோரில் இருக்காது - கூகுள் அதிரடி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR