கைலாசாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விடும் நித்தி - அடுத்த அலப்பறை
ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் கானா நாட்டில் இருக்கும் ஒரு மாவட்டத்துடன் இரு நாடு உறவை வளர்ப்பதாக கைலாசா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழு வடிவம். நம் நாட்டில் பல சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா இங்கு இருந்தால்தானே பிரச்னை என்று முடிவு செய்து கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார்.
நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று அதகளம் செய்தார். அதுமட்டுமின்றி கைலாசாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கான் விசா இலவசம் என்று அறிவித்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் பலர் இருக்கின்றனர். அங்கிருந்து புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியாவது வழக்கமாக இருக்கிறது.
மேலும் படிக்க | உயிரிழந்த கணவர் மூலம் 2 வருடங்கள் கழித்து குழந்தை! கணவரே பிறந்ததாக கொண்டாடும் பெண்!
இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் கானா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள எஃபுடு என்ற மாவட்டத்துடன் புதிய உறவை வளர்க்க இருப்பதாக கைலாசா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “பழமையான கலாசாரம், இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசா நாடு; மத சுதந்திரம் மற்றும் மற்ற உரிமைகள், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நித்தியானந்தாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அவர் சமாதி நிலையை அடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் சில நாள்களிலேயே, தனக்கு ஒன்றும் இல்லை திரும்ப வந்துட்டேன் என நித்தியானந்த தன் கைப்பட எழுதி அதன் புகைப்படத்தை பகிர்ந்தார். இப்படிப்பட்ட சூழலில் கானா நாட்டுடன் நித்தியானந்தா உறவு வளர்க்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கிண்டி கிங்ஸ் மருத்துவமனை விரைவில் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR