Nivar Cyclone Updates: நெருங்கும் நிவர், தமிழகம், புதுச்சேரி ஆந்திராவில் உயர் எச்சரிக்கை நிலை
நிவர் புயல் காரணமாக ஏற்படும் கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடுகளும் சாலைகளும் சேதமடையக்கூடும். மின் இணைப்புகளும் ரத்து செய்யப்படலாம்.
புதுடில்லி: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இது தற்போது கடலூரிலிருந்து சுமார் 310 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, அடுத்த 12 மணி நேரத்தில் இது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்த சூறாவளி (Cyclone) நவம்பர் 25 பின்மாலைப் பொழுதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ கிழக்கு-தென்கிழக்காகவும் இப்புயல் நகர்ந்துள்ளது.
கடலூர் மற்றும் புதுச்சேரி (Puducherry) துறைமுகங்களில் பெரும் ஆபத்து சமிக்ஞை 'எண் 10' புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இந்த சமிக்ஞை கடுமையான சூறாவளி காரணமாக துறைமுகம் கடுமையான வானிலை அனுபவிக்கும் என்பதைக் குறிக்கிறது. புயல், துறைமுகத்திற்கு அருகில் அல்லது மிக அருகில் செல்ல வாய்ப்புள்ளது என்பதையும் இது குறிக்கிறது.
வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் கடற்கரையில் பலத்த மற்றும் தீவிரமான காற்றுடன் மழை பெய்யக்கூடும். இந்த கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடுகளும் சாலைகளும்
சேதமடையக்கூடும். மின் இணைப்புகளும் ரத்து செய்யப்படலாம். மின் கம்பிகள், பயிர்கள் மற்றும் மரங்களுக்கு சேதம் ஏற்படலாம் என IMD ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ: அதி தீவிர புயலாக உருவெடுத்த “நிவர்” இன்று இரவு கரையை கடக்கிறது..!
தமிழ்நாடு: காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் நிவர் (Nivar) இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையும் காற்றின் வேகமும் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலும், புயல் கடலைக் கடக்கும் இடங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காற்று 100 கி.மீ வேகத்தில் வீசும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க ஏற்கனவே புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய அதிகன மழையை ஏற்படுத்தியுள்ள நிவர் புயல் இன்று இரவு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கடக்கிறது. புதுச்சேரியின் கடல் சீற்றத்தை இந்த காணொலியில் காணலாம்:
ஆந்திரா: ஆந்திரா முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, கனமழை காரணமாக ஏரிகள் எல்லை மீறக்கூடும் என்றும் அவற்றைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தென் கரையோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் சுமார் 1,200 NDRF மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 800 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
என்டிஆர்எஃப் தலைவர் எஸ்.என் பிரதான் கூறுகையில், சூறாவளி புயல் வங்காள விரிகுடாவிலிருந்து எழும்பி தெற்கு கடற்கரையை நோக்கிச் செல்லும்போது அதிக அளவு தீவிரம் கொண்டு மோசமான நிலையில் இருக்கும் என்றும் அதற்கு தங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ALSO READ: புயல் தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கு அவசர உதவி எண்களின் விவரம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR