சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்தார்.
சென்னை: சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்தார்.
இதனால் சட்டசபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் நம்பிக்கையில்லா தீர்மானம் இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார்.
இதுகுறித்த கடிதம் கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபை செயலாளரிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று, சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்படது.
சபாநாயகர் தனபாலை அப்பதவியிலிருந்து நீக்ககோரும், தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். சபாநாயகர் தனபாலுக்கு பதிலாக சபையை நடத்திய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குரல் வாக்கெடுப்பு நடத்தினார்.
எண்ணிக்கை அடிப்படையில் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக ஜெயராமன் அறிவித்தார்.
ஆனால், உறுப்பினர்களின் தலைகளை எண்ணி, ரிசல்டை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
கருணாநிதி அவைக்கு வரவில்லை என்பதால் அவரை தவிர்த்து எதிர்க்கட்சிகளின் 97 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர். அதேநேரம், ஓபிஎஸ் அணியிலுள்ள 12 எம்.எல்.ஏக்களும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.