நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அடுத்த  புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைபட்டி காமராஜர் காலணியை சேர்ந்தவர் அருண் பாண்டியன் கடந்த 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலைபட்டியில் உள்ள சீட்டு என்ற சலூன் கடைக்கு தனது இரு மகன்களை முடி திருத்தம் செய்ய அழைத்து சென்று உள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது எனக் கூறிய சலூன் கடைக்காரர்


ஆனால் சலூன் கடையின் உரிமையாளர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உங்களுக்கு இங்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும், தான் முடி திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.  மேலும் 18 பட்டி மக்கள் கூறியதை மீற முடியாது என்றும், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள், பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.


 முடித்திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரர்


இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் பாண்டியன் முடித்திருத்தம் செய்யச் சொல்லி சலூன் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியும், அவர் இறுதி வரை அருண் பாண்டியனின் குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்யவில்லை.  இந்த நிலையில் அருண்பாண்டியன் தனது மகனுடன் சலூன் கடைக்காரிடம் முடித்திருத்தம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | பள்ளி காம்பவுண்ட், ஆட்டோ, வீடு, கடை.... வேகமாக வந்த 2 லாரிகளின் வெறியாட்டம்: பகீர் விபத்து


தீண்டாமை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார்


இது குறித்து அருண் பாண்டியன் கூறுகையில் கடந்த 17 ம் தேதி திருமலைபட்டியில் உள்ள சீட்டு என்கின்ற சலூன் கடைக்கு சென்று மகன்களுக்கு முடிதிருத்தம் செய்யச் சொல்லி கேட்டபோது, கடைக்காரர் முடிதிருத்தம் செய்ய முடியாது ஊர் கட்டுப்பாடு இருப்பதாக கூறினார். அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீண்டாமை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பதாக அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க - ’தேசநலன் கருதி’ பாமக எடுத்த கூட்டணி முடிவு - பாஜகவுடன் சேரப்போகிறது! அதிமுக ஏமாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ