கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே இரண்டு டாரெஸ் லாரிகள் அதிவேகமாக வந்ததன் காரணமாக கட்டுப்பாடை இழந்து ஒரே இடத்தில் மோதிக்கொண்டன. கட்டுப்பாட்டை இழந்த லாரிகள், அரசு பள்ளி காம்பவுண்ட் சுவர் மற்றும் மீன் வியாபாரம் செய்யும் ஆட்டோ மீது மோதின. அருகில் இருந்த வீட்டு காம்பவுண்ட் சுவர், கடை ஆகியவற்றின் மீதும் லாரிகள் புகுந்ததால் கோர விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அதி காலை நடந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
குமரி மாவட்டத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்தி உயிர்களை பறிக்கும் எமனாக மாறிய கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கன ரக லாரிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக லாரிகளால் விபத்து ஏற்பட்டு அடிக்கடி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலையில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு சென்று விட்டு திரும்பி வந்த இரண்டு கனரக லாரிகள் அதிவேகமாக வந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்தன. ஒரு லாரி சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினி லாரி மீது மோதி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது. இதே பகுதியில் இன்னொரு லாரி ஒரு மீன் வியாபாரியின் மீன் ஏற்றி வந்த ஆட்டோ மீது மோதி ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை தகர்த்து அருகில் உள்ள கடைக்குள் புகுந்து நின்றது.
மேலும் படிக்க | TN Lok Sabha Elections 2024 : தமிழக ஆந்திர எல்லையில் 3.84 லட்சம் பணம் பறிமுதல்
அதிர்ஷ்ட வசமாக மீன் வியாபாரி, வீட்டில் உள்ள மக்கள், அரசு பள்ளியில் மாணவர்கள் யாரும் வெளியே இல்லாத காரணத்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய இரண்டு லாரிகளின் ஓட்டுனர்களும் தப்பி ஓடிய நிலையில் களியக்காவிளை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக லாரிகள் அதி வேகம், அதிக பாரம் ஏற்றி விதி மீறி செயல்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்ப்படுத்தி வரும் எமனாக மாறி உள்ளன. இந்த லாரிகளால் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என அச்சத்துடனேயே பொதுமக்கள் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதி காலை நடந்த இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் படிக்க | தேர்தல் பறக்கும் படை சோதனை! 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ