North Chennai  Lok Sabha Constituency Full Details: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான வடசென்னை மக்களவைத் தொகுதி மிகவும் பழமையானது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு வடசென்னை மக்களவை தொகுதியின் கீழ் கொளத்தூர், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் (தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் இடம் பெற்றுள்ளன.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடசென்னை மக்களவைத் தொகுதி விவரம்


தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறைக்கு முன்னதாக 1977 முதல் 2009 வரை ராயபுரம், துறைமுகம் (சென்னை சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டது), வில்லிவாக்கம் (சென்னை சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டது), பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கீழ் இருந்தது. 2009  ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்கு பிறகு வில்லிவாக்கம் மற்றும் துறைமுகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டது. இந்தமுறை வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு 1957 முதல் 2019 வரை நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட எஸ்.சி.சி. அந்தோணிப்பிள்ளை வெற்றி பெற்றார். வட சென்னை தொகுதியை பொறுத்த வரை திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து இடதுசாரி கட்சி இரண்டு முறையும், காங்கிரஸ் மற்றும் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.


மேலும் படிக்க - தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறு


வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்


- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,84,689
- ஆண் வாக்காளர்கள்: 7,24,968
- பெண் வாக்காளர்கள்: 7,59,208
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 513


வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்


- கொளத்தூர்
- ராயபுரம்
- ஆர்.கே.நகர்
- திருவொற்றியூர்
- பெரம்பூர் 
- திருவிக நகர் (தனி)


மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?


2024 லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்


திராவிட முன்னேற்றக் கழகம் - டாக்டர் கலாநிதி வீராசாமி 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - ராயபுரம் மனோகரன்
பாரதிய ஜனதா கட்சி - ஆர்.சி.பால் கனகராஜ்
நாம் தமிழர் கட்சி - அமுதினி 


2019 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதி வெற்றி நிலவரம்


2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக வேட்பாளர் டாக்டர். கலாநிதி வீராசுவாமி 590,986  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1,29,468 வாக்குகள் பெற்ற தேமுதிக வேட்பாளர் ஆர். மோகன் ராஜ் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஏ.ஜி.மௌர்யா 1,03,167  வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி. காளியம்மாள் 60,515  வாக்குகளும் பெற்றனர்.


மேலும் படிக்க - தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ