உஷார்!! மழையின் அதிரடி இன்று இரவு முதல்...
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், வடகிழக்கு பருவமழை இன்று இரவு மீண்டும் தொடங்குகிறது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி, தமிழக முழுவதும் கன மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் கரை பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த மூன்று நான்கு நாட்களாக மழை பெய்வது குறைந்து.
ஆனால் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் இரண்டாவது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது உருவாகியுள்ளதால், இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் கனமழையும், சில நேரங்களில் மிக கனமழையும்பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று இரவு முதல் மழை தொடங்கி, புதன்கிழமை வரை நீடிக்கலாம். அவ்வப்போது சின்ன சின்ன இடைவெளிகள் இருக்கும். சில நேரங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்புஉண்டு. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் இருக்கும். உள்மாவட்டங்களான வேலூர், விழுப்புரம், மற்ற கடற்கரைப் பகுதிகளான கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டப் பகுதிகளிலும் மழை இருக்கும்.
நவம்பர் 15-ந்தேதிக்கு பின், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையின் வடபகுதியை நோக்கி நகரும். காற்றின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.