அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன என தமிழக துணைமுதல்வர் OPS கருத்து....   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார். 


மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்று, அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.  


இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் OPS கூறுகையில், கோடநாடு கொள்ளை விவகாரம் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள சக்தியற்ற எதிர்கட்சிகள் பொய்யான, அவதூறான தகவல்களை பரப்பி, அரசியல் லாபம் தேடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது, எதிர்கட்சிகளின் பொய்யான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்க்கொண்டு வெற்றிகொள்வோம். நியாயம் எங்கள் பக்கம் உள்ளது என தெரிவித்தார்.


மேலும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தவறான தகவல்களை பரப்புவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை முன் வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து உடனடியாக பேசி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 


முன்னதாக, பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழ மக்கள், இந்தியர்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.