சென்னை: தமிழக அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதைக் கடந்த ஆண்டு 58லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில் இன்று சட்டப் பேரவையில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,


தமிழக அரசுப் (Government School) பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஓய்வு (Retirement) பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 


ALSO READ | இனி 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கிடையது.. All Pass!


இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்  துறை நிறுவனங்களின் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு தற்போது அரசுப் (TN Govt) பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு அதாவது 31.05.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும். 



இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR