சென்னை: தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் (National Population Register) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடும் (National Register of Citizens) ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக ரூ.4000 கோடியை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் என்.சி.ஆர். மற்றும் என்.பி.ஆர். குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியது, "தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வுக்கான சூழலை தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக ரூ.4000 கோடியை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.


 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.