மதுரை: பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா மைதானத்தில், தேசிய பாதுகாப்பு படையின் (National Security Guard) 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையையும் இந்த வீரர்கள் மேற்கொண்டனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமாண்டோக்கள் ஒத்திகை செய்தனர். 


150 க்கும் மேற்பட்ட என்எஸ்ஜி கமாண்டோக்கள் தமிழகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை தேசிய பாதுகாப்பு காவலர் படை (National Security Guard) உலகத்தரம் வாய்ந்த அமைப்பு ஆகும்.


பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சமாளிக்க பயிற்சி பெற்றுள்ள இந்த பிரிவு, எந்தவிதமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் பெற்றது. தீவிரவாத செயல்களை முறியடிக்க எதிர்பாராத சூழ்நிலைகளில் செயல்படுவதற்காக அவ்வப்போது பயிற்சி நடவடிக்கைகள் நடத்தப்படுவது வழக்கமானது.



இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆதரவாளர்கள் ஊடுருவல் செய்யாமல் இருப்பதற்கான பாதுகாப்பு மிகவும் பலமாக உள்ளது. அதேபோல், இந்தியாவின் தெற்கு கடற்கரைப் பகுதியும் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.


ஐ.எஸ் அமைப்பு, அல்கொய்தா (Islamic State and al Qaeda) போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களுடன், இந்திய தீபகற்பத்தின் பாதுகாப்பு தொடர்பான எந்தவிதமான  நிகழ்வுகளுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்வதில் என்.எஸ்.ஜி முன்னணி வகிக்கிறது.


Also Read | விதிமீறலுக்காக பிளிப்கார்ட்டுக்கு ஏன் 10000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது?


அதன் அடிப்படையில் தேசியப் பாதுகாப்புப் படையின் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள், மதுரையில் பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா மைதானத்தில் ஹெலிகாப்டரில் இருந்து பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்புப் பயிற்சியை மேற்கொண்டனர்.


பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகைகளையும் கமாண்டோக்கள் நடத்தினர்.


NSG தற்போது உலகளவில் மிகவும் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவு. ஒரு தவறுகூட செய்யாமல் துல்லியமாக நடவடிக்கைகளை எடுக்கும் அமைப்பு என்ற பெயர் பெற்றது என்.எஸ்.ஜி. தீவிரவாத செயல்களை முறியடிக்க விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே என்.எஸ்.ஜி (NSG) பயன்படுத்தப்படுகிறது.


 Also Read | அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR