NTK Seeman Slams TVK Vijay, Latest News Updates: சுதந்திரத்திற்கு பின்னர் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று நாடு முழுவதும் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த நாளை தங்களது மாநிலம் உருவான நாளாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஜூலை 18ஆம் தேதிதான் 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என தற்போதைய திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, நவம்பர் 1ஆம் தேதி என்பது எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக அமையாது எனவும் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டி அண்ணா 1968ஆம் ஆண்டு அறிவித்த தினமாக ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு தினம் என திமுக அரசு வாதிடுகிறது. இதற்கு அதிமுக, பாஜக, நாதக சார்பில் எதிர்ப்புகள் கிளம்பின. தவெக தலைவர் விஜய்யும் நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் எனவும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 


'குடிப்பகத்தில் கருணாநிதி பெயர்'


இது ஒருபுறம் இருக்க, நாம் தமிழர் கட்சி சார்பில் நவ. 1ஆம் தேதியை முன்னிட்டு 'தமிழ்நாடு நாள்' கொண்டாட்டக் கூட்டம், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சீமான், "தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக தன் உயிர் நீத்த சங்கரலிங்கனாரை திராவிட மடல் அரசு போற்றாதது ஏன்...? பேசாதது ஏன்...?


மேலும் படிக்க | “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” திருக்குறளின் அர்த்தம் என்ன தெரியுமா?


தமிழர்களுக்கு எந்த அடையாளமும் பெருமையும் வரலாற்று சுவடும் இருக்கக் கூடாது என்பதே திராவிட  மாடல் அரசின் நோக்கம். இன்னும் ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு பெயர் மாற்றப்பட்டு கருணாநிதி நாடு என்று இருக்கும். கழிப்பிடம் மற்றும் குடிப்பகத்திற்கு (மதுபானக் கடை) மட்டுமே கருணாநிதி பெயர் இல்லை. நியாயமாக கருணாநிதி பெயர் குடிப்பகத்தில்தான் இருக்க வேண்டும்.



உலகம் முழுவதிலும் மொழி இன அடிப்படையிலேயே அரசியல் கட்டமைப்பு உள்ளது. இதை பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை ஏற்பதா? எதிர்ப்பதா?... ஐரோப்பிய நாடுகள் பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட நாடுகள் மொழி வழியிலேயே 
பிரிந்துள்ளது. இது பிரிவினைவாதமா...? விடுதலையா...? சாதி, மதத்தோடு மொழியையும் இனத்தையும் இணைக்க கூடாது. மொழி, இனம் பிரிவினைவாதம் என்று பேசுவது அரை வேக்காட்டுத் தனம்" என்றார். 


மோடி பேச்சுக்கு வரவேற்பு


மேலும் சீமான் பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றார். அதுகுறித்து அவர்,"உலக நாடுகள் எங்கு சென்றாலும் உலகில் மூத்த மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார், அது எங்கள் நாட்டில் இருப்பது பெருமை என்கிறார். இந்திய மொழிகளின் தன்மையை தமிழில் இருந்து அறியலாம் என்றும் பிரதமர் மோடி பேசுகிறார்" என்றார்.


விஜய் மீது கடும் தாக்கு


தொடர்ந்து, சீமான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை விமர்சித்தும் பேசினார். ஆனால், விஜய்யின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடாமல் மறைமுகமாகவே தாக்கிப்பேசி வந்தார். குறிப்பாக, 'நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் அல்ல, வரலாற்றை கற்பிக்க வந்தவன்' என விஜய்க்கு சீமான் பதிலடி கொடுத்தார்.


மேலும் படிக்க | சிறுவர்கள் சண்டையில் தாக்கப்பட்ட த.வெ.க நிர்வாகி..நாகையில் பரபரப்பு


"இனிதான்  நீங்கள் அம்பேத்கரையும் பெரியாரையும் சங்க இலக்கியத்தையும் படிக்க வேண்டும். நாங்கள் அனைத்தையும் படித்துவிட்டுதான் வந்துள்ளோம். தலையாலங்காலத்து பாண்டிய மன்னன் கதை கதையல்ல, அது எங்கள் வரலாறு" என விக்கிரவாண்டி அருகே நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பாண்டிய மன்னன் குறித்து விஜய் சொன்ன குட்டி கதைக்கு சீமான் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். 


கொள்கை அல்ல கூமுட்டை...


தொடர்ந்து பேசிய சீமான்,"திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ் தேசியம் என்றால் என்ன என்று இவர்களுக்கு தெரியவில்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என்ன இது...? விஜய்யின் திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் எனும் கொள்கையால் பயந்துவிட்டேன். அண்மையில் வந்த கோட் திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜயாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்துவிட்டார்" என்றார். 


மேலும், "75 ஆண்டுகால பவள  விழா கொண்டாடும் திமுகவிற்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு. தமிழருக்கு தமிழ்தேசியமே பொருந்தும். இலங்கையில் தமிழர்கள் இறந்து கிடந்தபோது தான் திராவிடம் வேறு என்பது புரிந்தது. தமிழ் தேசியம் திராவிடத்திற்கு நேர் எதிர் இரண்டும் எப்படி ஒன்றாகும். தமிழ் தேசியம் தமிழ்நாடு பிறந்த நாளை கொண்டாடும். தமிழ்நாடு என்ற பெயர் வைத்ததை திராவிடம் கொண்டாடும். இதில் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா?" என சீமான் விஜய்யை மறைமுகமாக தாக்கினார். மேலும் விஜய் கூறுவது கொள்கை அல்ல கூமுட்டை என்றும் பேசினார். விஜய்யை போல் பேசிய சீமான், 'வாட் ப்ரொ இட்ஸ் வெரி ராங் ப்ரோ' (What bro, It's very wrong bro) என்றார். 


தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது...


"ப்ரோ இது ட்ரைலர் தான் ப்ரோ, மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா?, வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி" எனவும் விஜய்யை சீண்டினார். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என சொல்லியிருந்தால் பரவாயில்லை, கருப்பட்டிக்கு எப்படி பால் வரும் என சீமான் கேள்வி எழுப்பினார். 


மேலும், "சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்துவிடுவார் என விஜய்யின் கொள்கையை தாக்கினார். லட்சத்தியத்திற்கு எதிராக தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான்... இதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது" என்றார். 


மேலும் படிக்க | கருப்பு பணம் வாங்கிய விஜய் வெளியான ஆதாரங்கள்.... வச்சு செய்யும் நெட்டிசங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ