சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு OPS மறுப்பு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதல்வர் பதவி வேண்டி இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மு.க. ஸ்டாலின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு ஏற்கத்தக்கது அல்ல. தலைமை செலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி தான் கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டதாகவும், யாகம் ஏதும் நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.


மேலம் முதல்வர் ஆகிவிடலாம் என்றால், MLA-க்கள் அனைவரும் யாகம் நடத்தி முதல்வர் ஆகிவிடலாமே?... யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? என கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து பேசிய அவர்.,  ஸ்டாலின் எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என நினைத்து செயல்படுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றார் என தெரிவித்தார்.


தொடர்ந்து வரும் தேர்தலில் அதிமுக வெற்றி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு., அம்மா அறிவித்த மக்கள் நல திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். எனவே, மக்கள் முழுமையாக 100-க்கு 100% எங்கள் பக்கம் நிற்பார்கள். கனவில் வாழும் எதிர்கட்சிக்கு தேர்தலின்போது இது தெரியவரும் என குறிப்பிட்டார்.