முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலா தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏ தலைமை கூட்டம் கூடியது. அப்பொழுது பெருவாரியான எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். 


யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் யாருடன் தொடர்பில் இருக்க கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டி காட்டி உள்ளார் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.


ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா இருந்தாரா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.


2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை. ஜெயலலிதா சொன்ன வேலையை மட்டுமே நான் செய்தேன். மற்றவை குறித்து நான் சிந்தித்தது கூட இல்லை. முதலமைச்சர் பதவிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்கள். அவர்கள் என்னை அசிங்கப்படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.


வாக்களித்த மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டும். என்னுடைய பின்னணியில் திமுகவோ, பாஜகவோ என யாரும் யாரும் இல்லை. புதிய கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணம் தொடரும்.


அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதலமைச்சர் பொறுப்பு ஏற்பேன். பின்வாசல் வழியாக பதவியை பிடிக்க வேண்டும் என நினைக்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.