ஒற்றைத் தலைமையா இரட்டைத் தலைமையா என்ற கேள்வியுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று கூடியது. புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் தெம்போடு ஓபிஎஸ் இப்பொதுக்குழுவில் கலந்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அவர் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்ததில் இருந்தேன் அங்கிருந்த சூழல் அவருக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. இபிஎஸ் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் ஒற்றைத் தலைமை என கோஷம் எழுப்ப, மற்றொரு தரப்பினர் ஓபிஎஸ் துரோகி என கோஷம் எழுப்பினர். ஓபிஎஸ் மட்டுமின்றி அவரது ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இதனால் அதிருப்தியடைந்த வைத்திலிங்கம் மேடையிலிருந்து கீழிறங்கி அமர்ந்தார். இதனையடுத்து இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் மேடைக்கு ஏறி எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதனையடுத்து தீர்மானங்கள் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாக வைகைச்செல்வன் கூறிக்கொண்டிருக்கும்போது, அனைத்துவகை தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகின்றன என சி.வி. சண்முகம் கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. 



நிலைமை இப்படி இருக்க, மைக் பிடித்த வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமையை ஆணித்தரமாக வலியுறுத்தினர். மேலும்  அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடக்கும் எனவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர், இது சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனால் அவரது ஆதரவாளர்கள் படு அப்செட்டாகியுள்ளனர். 


மேலும் படிக்க | தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன - பொதுக்குழு மேடையில் ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த மாஜி அமைச்சர்


அதுமட்டுமின்றி பொதுக்குழு கூட்டம் நடக்கும் மண்டபத்திற்கு வெளியே நின்ற பன்னீர்செல்வத்தின் கார் டயர்களும் பஞ்சர் ஆக்கப்பட்டதாகவும், வெளியேறிய ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களும், காகிதங்களும் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் இனியும் ஏதேனும் அதிரடி நடவடிக்கையில் இறங்காவிட்டால் நிச்சயம் கட்சி கையவிட்டு போய்விடும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.


மேலும் படிக்க | பொதுக்குழு கூட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ; இபிஎஸ் - ஓபிஎஸ் இப்படி மோதிக்கொள்ள என்ன காரணம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR