பொதுக்குழு கூட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ; இபிஎஸ் - ஓபிஎஸ் இப்படி மோதிக்கொள்ள என்ன காரணம்?

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அறிவோம்...

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 23, 2022, 11:05 AM IST
  • பொதுக்குழு கூட்டத்தின் முக்கியத்துவம்
  • பொதுக்குழு - அதிமுகவின் உச்சக்கட்ட அதிகார அமைப்பு
  • பொதுக்குழு அங்கீகரித்ததை யாராலும் மாற்ற முடியாது
பொதுக்குழு கூட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ; இபிஎஸ் - ஓபிஎஸ் இப்படி மோதிக்கொள்ள என்ன காரணம்? title=

அதிமுக கழக நிறுவனர் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் முறையே பொதுச்செயலாளர் தேர்தலில் நின்று போட்டியில்லாமல் தேர்வாகி பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இடையில் ப.உ.சண்முகம் , நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.ராகவானந்தம் போன்றோர் தற்காலிக பொதுச்செயலாளராக பல்வேறு கால கட்டத்தில் இருந்திருக்கிறார்கள். 

அதில், சசிகலாவும் 2016 டிசம்பர் மாதத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 6 மாதத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொதுக்குழுவின் ஒப்புதலை பெற்றிருந்தால் அவரை கட்சியை விட்டு யாராலும் நீக்க முடியாது. 

அதிமுக பொதுக்குழு ,ஒற்றை தலைமை

பொதுக்குழுவே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினாலும் நீக்க முடியாது. ஆனால் சசிகலா பொதுச்செயலாளர் தேர்தலை சந்திக்கும் முன்பே அதிமுக பொதுக்குழு கூடி அதற்கு முன்பு சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானத்தை ரத்து செய்துவிட்டது. 

அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ' என்ற பதவிகளை பொதுக்குழு உருவாக்கியது. அப்பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முறையே OPS,EPSஇருவரும் அதில் போட்டியின்றி வெற்றி பெற்றார்கள். அந்த தேர்தல் வெற்றியை இந்த பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வெற்றி செல்லாததாகிவிடும். அதாவது அதிமுகவின் தலைமை பதவி மீண்டும் 2016 டிசம்பர் நிலைக்கு சென்றுவிடும். 

அதிமுக பொதுக்குழு ,ஒற்றை தலைமை

ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு போய் தீர்ப்பு வாங்கியிருக்கும் அந்த வரைவு தீர்மானங்கள் 23ல் ஒன்றுதான் இந்த 'ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் முடிவு அங்கீகாரம். இந்த தீர்மாணத்தை வெற்றிபெற செய்தால்தான் இருவரும் ஒருங்கிணைப்பாளர்களாக பதவியில் தொடர முடியும். இதில் ஓபிஎஸ் ஒருவர் மட்டும்தான் இரட்டை தலைமை பதவி தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

மேலும் படிக்க | இரண்டு நாட்களில் பல்டி அடித்த மாபா பாண்டிய ராஜன் - நம்பிய ஓ.பி.எஸ் ஷாக்

அவர் நினைத்தது நடக்க வேண்டுமானால் இந்த தீர்மானம் நிறைவேற வேண்டும். மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் இரண்டாயிரத்து600பேரில் வெறும் 120 பேர் ஆதரவோடு எப்படி இந்த தீர்மானத்தை ஓபிஎஸ் வெற்றியடைய செய்யப்போகிறார் என்ற கேள்வி தலையெடுத்துள்ளது. இந்த 23 வரைவு தீர்மானங்களும் வெற்றி பெற வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அப்படி உத்தரவிடவும் முடியாது. எதுவாக இருந்தாலும் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுதான் அதிமுகவின் உச்சக்கட்ட அதிகார அமைப்பு, பொதுக்குழு அங்கீகரித்ததை யாராலும் மாற்ற முடியாது. என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News