திருச்செந்தூரில் நேற்று சசிகலாவை சந்தித்த நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கபட்டுள்ளார் ஓ. ராஜா.  சிறையில் இருந்து வெளியில் வந்ததிலிருந்து அமைதியாக இருந்த சசிகலா, தற்போது தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்று தெரிவித்து இருந்தார் சசிகலா.  மேலும், தேனியில் உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்கு ஓட்டுகள் பிரிந்ததே காரணம்.  இதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.  அது மட்டுமில்லாமல் இரட்டை தலைமையை தவிர்த்துவிட்டு சசிகலாவின் கீழ் தலைமையை கொண்டு வர வேண்டும் என்றும் கூறினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | திருமாவளவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் திமுக உறுப்பினர்கள்!


பின்பு தேனியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற இருந்தது.  ஆனால், எடப்பாடி தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக இக்கூட்டம் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது.  இப்படி அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் நேற்று சசிகலாவை திருச்செந்தூரில் சந்தித்து பேசினார் ராஜா.  அவர் தங்கி இருந்த விடுதியில் காத்திருந்து சந்தித்து பேசினார்.  இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  



இந்நிலையில் அதிமுக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது.  இது தொடர்பாக வந்த அறிக்கையில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் ராஜா, முருகேசன், வைகை, சேதுபதி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட அறிக்கை வெளிவந்துள்ளது.  


 



மேலும் படிக்க | சசிகலா சுற்றுப்பயணம்.. உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR