Chennai High Court: கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டதற்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எச்.ராஜாவுக்கு எதிராக புகார்


2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக மூத்த எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.


எச்.ராஜா மீது போடப்பட்ட வழக்கு என்ன?


இதனையடுத்து, எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.


சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு


எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 


மேலும் படிக்க - 'எனது மொபைலும் ஒட்டு கேட்கப்படுகிறது...' குண்டை தூக்கிப்போட்ட ஹெச். ராஜா


வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மனு


தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.


இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 


ஆமாம்.. நான் தான் பதிவிட்டேன் -எச்.ராஜா


அப்போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா? என நீதிபதி ஜி.ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பு, "ஆம்" என்று பதில் அளித்தது. 


வழக்கை ரத்து செய்ய முடியாது -சென்னை உயர் நீதிமன்றம்


எச்.ராஜா தரப்பு பதிலை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க - ஹெச். ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகள்... ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் - அப்போ நெக்ஸ்ட்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ